ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனுஷ் நடிக்கும் முதல் நேரடி தெலுங்குப் படம் வாத்தி!

தனுஷ் நடிக்கும் முதல் நேரடி தெலுங்குப் படம் வாத்தி!

வாத்தி

வாத்தி

இந்தப் படம் தனது அடுத்த தமிழ் படமாகவும், முதல் நேரடி தெலுங்குப் படமாகவும் இருக்கும் என தனுஷ் சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் முதல் நேரடித் தெலுங்குப் படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அவரை முந்திக் கொண்டு இயக்குனர் வெங்கி அட்லூரி தனுஷை தெலுங்கில் அறிமுகப்படுத்துகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது. தமிழில் படத்துக்கு வாத்தி என்று பெயர் வைத்துள்ளனர்.

தனுஷின் படவரிசை திடீர் திடீரென மாறிக் கொண்டிருக்கிறது. மாறன் படத்துக்குப் பிறகு செல்வராகவனின் நானே வருவேன், சேகர் கம்முலா படம் என வரிசையாக படங்கள் இருந்த நிலையில், அவற்றை முந்திக் கொண்டு திருச்சிற்றம்பலம் படத்தில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடித்தார். தற்போது நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இதனை முடித்ததும் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென வேறு அறிவிப்பு வெளியானது.

சித்தாரா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் தெலுங்குப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார், நாளை படத்தின் பெயர் வெளியிடப்படும் என நேற்று அறிவித்தார்கள். இந்தப் படம் தனது அடுத்த தமிழ் படமாகவும், முதல் நேரடித் தெலுங்குப் படமாகவும் இருக்கும் என தனுஷ் சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி இன்று காலை படத்தின் பெயரை அறிவித்துள்ளனர். வாத்தி என படத்துக்கு பெயர் Dhanush next bilingual titled as Vaathi, Dhanush and Sekhar kammula, Dhanush vaathi, vaathi movie, dhanush movies, dhanush tamil movies, dhanush bilingual vaathi, தனுஷ், தனுஷ் வாத்தி, தனுஷ் படங்கள், தனுஷ் திரைப்படம், dhanush telugu movie, dhanush movies, dhanush twitter, dhanush parents, dhanush net worth, dhanush awards, dhanush family, dhanush wife, dhanush age, தனுஷ் தெலுங்கு திரைப்படம், தனுஷ் பெற்றோர், தனுஷ் திரைப்படங்கள், தனுஷ் , தனுஷ் நிகர மதிப்பு, தனுஷ் விருதுகள், தனுஷ் குடும்பம், தனுஷ் மனைவி, தனுஷ் வயதுவைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - அந்த ஒரு ஆள் கிட்ட உஷாரா இரு... பாவனியை எச்சரிக்கும் குடும்பத்தினர்

கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிராக போராடும் இளைஞனின் கதை இது என சொல்லப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சம்யுக்தா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை முடித்த பின் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Dhanush