Dhanush: ’ஹே கோலி சோடாவே...’ வைரலாகும் தனுஷின் புதிய படம்!

நடிகர் தனுஷ்

அமெரிக்காவில் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள தனுஷ் 2 வாரங்கள் அங்கு ஓய்வெடுத்துவிட்டு, சென்னை திரும்பவிருக்கிறார்.

  • Share this:
    சோடா பாட்டிலுடன் இருக்கும் படம் ஒன்றை நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் இருக்கிறார் தனுஷ். இவர் அங்கு சென்ற நேரம் கொரோனா அலை தீவிரமாக, அங்கு மாட்டிக் கொண்டார். அவர் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் வரும் 18-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். தனுஷுடன் இணைந்து ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by Dhanush (@dhanushkraja)






    இதற்கிடையே அமெரிக்காவில் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள தனுஷ் 2 வாரங்கள் அங்கு ஓய்வெடுத்துவிட்டு, சென்னை திரும்பவிருக்கிறார். இந்நிலையில் அவர் கோலி சோடா குடிக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ’ஹே கோலி சோடாவே’ என்ற பாடலின் வரியையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தப்படம் தற்போது 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: