Home /News /entertainment /

கேப்டன் மில்லர் படத்திற்காக புது லுக்கில் நடிகர் தனுஷ் - வைரலாகும் போட்டோ!

கேப்டன் மில்லர் படத்திற்காக புது லுக்கில் நடிகர் தனுஷ் - வைரலாகும் போட்டோ!

கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர்

1930-40 களில் நடந்த சம்பவங்களாக கேப்டன் மில்லர் படம் பீரியட் மூவியாக உருவாக்கப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் தனுஷின் புதிய லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

    வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார். 1930-40 களில் நடந்த சம்பவங்களாக கேப்டன் மில்லர் படம் பீரியட் மூவியாக உருவாக்கப்படுகிறது.

    தனுஷின் பிறந்த நாளையொட்டி வெளியான கேப்டன் மில்லர் படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சாணிக் காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

    கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

    Also read... மாலத்தீவில் நடிகை சன்னி லியோனே - இணையத்தில் வைரலாகும் நியூ கிளிக்ஸ்!

    இந்நிலையில் அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகின.



     




    View this post on Instagram





     

    A post shared by Dhanush (@dhanushkraja)






    இதனை தொடர்ந்து தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீண்ட முடி மற்றும் தாடியுடன் தனுஷ் காட்சியளிக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor dhanush, Entertainment

    அடுத்த செய்தி