நடிகர் தனுஷ் பியானோவில் ’நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ பாடலை வாசிக்கும் வீடியோவை பதிவிட்டு, தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் பிரசன்னா.
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம், அலட்டிக்கொள்ளாத எளிமையான உடல்மொழி, திரையில் பார்த்ததும், உடனடியாக நமது வாழ்க்கையுடன் ஒப்பிட்டுக் கொள்ளும்படியான இயல்பான நடிப்பு. இது தான் தனுஷ்! அவர் இன்று தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அவர் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் டீசர் பர்த் டே ஸ்பெஷலாக இன்று வெளியாகிறது. அதோடு நேற்று வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டரும் வெளியானது. இதைத் தவிர கேப்டன் மில்லர் என்ற படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனுஷுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பியானோவில் ’நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ பாடலை தனுஷ் வாசிக்கும், வீடியோவை வெளியிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பிரசன்னா.
தனுஷின் பர்த்டே பிளான் இதுதான்!
Wishing only greater heights and even greater happiness to my dear bro @dhanushkraja ❤️💐 and what more beautiful can u share to his fans on his birthday...🤩 bro don't kill me for sharing this. I kept it too long for just myself 🥰 pic.twitter.com/jU0eWffhkK
— Prasanna (@Prasanna_actor) July 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என் அன்பு சகோதரர் தனுஷ் இன்னும் உயரவும், இன்னும் கூடுதலான சந்தோசத்தைப் பெறவும் வாழ்த்துகிறேன். அவருடைய பிறந்தநாளில் இதைவிட அழகாக அவரது ரசிகர்களுக்கு வேறென்ன பகிர முடியும்? இதைப் பகிர்ந்ததற்காக என்னைக் கொன்று விடாதீர்கள் சகோதரா. எனக்காக நீண்ட நாட்கள் வைத்திருந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor dhanush, Prasanna