Home /News /entertainment /

தனுஷின் நானே வருவேன் படப்பிடிப்பு நிறைவு... விரைவில் டீசர்

தனுஷின் நானே வருவேன் படப்பிடிப்பு நிறைவு... விரைவில் டீசர்

நானே வருவேன் தனுஷ்

நானே வருவேன் தனுஷ்

Dhanush in Nane Varuven | கடைசியாக வெளிவந்த மாறன், ஜெகமே தந்திரம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படப்பிடிப்பு நிறைவு பெற்ற தி கிரே மேன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த நானே வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது. விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாலிவுட்டில் ஆத்ராங்கி ரே, ஹாலிவுட்டில் கிரே மேன் போன்ற படங்களில் நடித்தாலும் கடந்த ஆண்டு வெளியான கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷின் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கடைசியாக வெளிவந்த மாறன், ஜெகமே தந்திரம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படப்பிடிப்பு நிறைவு பெற்ற தி கிரே மேன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

    இதையும் படிங்க - அம்மாடி உன் அழகு... செம தூளு! நடிகை கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..

    தற்போது திருச்சிற்றம்பலம், வாத்தி மற்றும் நானே வருவேன் ஆகிய படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன. இந்நிலையில் நானே வருவேன் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. இதுதொடர்பான ஃபோட்டோவை தனுஷ் வெளியிட, ரசிகர்கள் அதனை வைரலாக்கியுள்ளனர்.



    இதனை தனுஷை நடிகராக உருவாக்கியவர் என்று புகழப்படும் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.



    தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா காம்போவில் முன்பு வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்கள் மெகா ஹிட் ஆனது. கடைசியாக 2006-ல் வெளியான புதுப்பேட்டை படத்திற்கு பின்னர் இந்த காம்போ இணையாமல் இருந்த நிலையில் நானே வருவேன் படத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விரைவில் நானே வருவேன் படத்தின் டீசர் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி