Home /News /entertainment /

Dhanush: தனுஷின் நானே வருவேன் புதிய போஸ்டர் வெளியீடு!

Dhanush: தனுஷின் நானே வருவேன் புதிய போஸ்டர் வெளியீடு!

தனுஷ்

தனுஷ்

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

    நடிகர் தனுஷின் நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘நானே வருவேன்’. கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில் தனுஷுடன் இணைந்து இந்துஜா ரவிச்சந்திரன், பிரபு, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசை ய்வன் ஷங்கர் ராஜா.

    இதில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் இந்தப் படத்தில் செல்வராகவனும் நடித்து வருகிறார். பல்வேறு இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்து வரும் செல்வராகவன், தனது இயக்கத்தில் தானே நடிக்கும் முதல் படமாக ‘நானே வருவேன்’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஹைதராபாத்துக்கு குட் பை சொன்ன விஜய்யின் வாரிசு டீம்!



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தற்போது நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதனை ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, ”நாளை பிறந்தநாள் காணும் திரு.தனுஷ், மென்மேலும் பல உயரங்கள் தொட்டு, சிறப்போடு வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்நாளை மேலும் சிறப்பாக்க நானே வருவேன் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Dhanush

    அடுத்த செய்தி