Home /News /entertainment /

Naane Varuven Teaser: வெளியானது தனுஷின் நானே வருவேன் டீசர்! 

Naane Varuven Teaser: வெளியானது தனுஷின் நானே வருவேன் டீசர்! 

நானே வருவேன் படத்தின் போஸ்டர்

நானே வருவேன் படத்தின் போஸ்டர்

தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திருச்சிற்றம்பலம் பெரும் வெற்றியடைந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் டீசரை, வெளியீட்டு தேதியுடன்  படக்குழு அறிவித்துள்ளது. 

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தை கலைபுலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இதில் நடிகர் தனுஷ், அண்ணன் - தம்பி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணன் நல்லவராகவும், தம்பி பழிவாங்குபவராகவும் வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. அதற்கான காட்சிகளும் டீசரில் இடம்பிடித்துள்ளன.

அதேபோல் இயக்குநர் செல்வராகவன் நானே வருவேன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கான காட்சிகளும் டீசரில் இடம்பிடித்துள்ளன. மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் டீசரை கவனிக்க வைத்துள்ளது. நானே வருவேன் படத்தை பொன்னியின் செல்வன் படத்துடன் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிட திட்டமிட்டனர்.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் அதன்பின் ஒரு நாள் முன்பே வெளியிடலாம் என யோசித்தனர். அவ்வாறு செய்தால் முதல் நாளில் அதிக திரையரங்கில் படத்தை வெளியிட்டு நல்ல வசூல் ஈட்ட முடியும் என யோசித்தனர். ஆனால் தற்போது டீசரில் வெளியீட்டு தேதியை குறிப்பிடாமல், செப்டம்பர் 2022-ல் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர். தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திருச்சிற்றம்பலம் பெரும் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து தற்போது நானே வருவேன் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Shalini C
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி