Home /News /entertainment /

 ஆகஸ்ட் மாதம் களமிறங்கும் தனுஷ் படம் 'திருச்சிற்றம்பலம்'

 ஆகஸ்ட் மாதம் களமிறங்கும் தனுஷ் படம் 'திருச்சிற்றம்பலம்'

தனுஷ்

தனுஷ்

மாறன் தோல்விக்குப் பின் களமிறங்கும் திருச்சிற்றம்பலம். ஆகஸ்ட் 18-ல் வெளியாகிறது.

தனுஷ் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகிறது என நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடித்திருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.  திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களாக வெளியாகி வந்தது.  மேலும் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளிலும் தயாரிப்பு நிறுவனம் இறங்கியது.

’மீண்டும் உங்களை சந்திப்பேன்; என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமெரிக்கா புறப்படும் முன் டி.ஆர். கண்ணீர் மல்க பேட்டி

இந்த திரைப்படம் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகிறது என நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.  இந்த திரைப்படத்தில் தனுசுடன் பிரகாஷ்ராஜ், நித்யாமேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  அதேபோல் அனிருத் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் திரைப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான மாறன் வெற்றியடடையவில்லை. இதனால் திருச்சிற்றம்பலம் படத்தை அதிகம் எதிர்பார்த்து இருக்கிறார். இதற்கு முன் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள The Gray Man படம் Netflix தளத்தில் ஜூலை 15-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actor dhanush, Kollywood

அடுத்த செய்தி