தனுஷை தேடிவந்து சந்தித்த தேசிய விருது பெற்ற இயக்குனர்

தனுஷை தேடிவந்து சந்தித்த தேசிய விருது பெற்ற இயக்குனர்

தமிழ், தெலுங்கு, இந்தி என பான் - இந்தியன் திரைப்படமாக மிகப்பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது. 

 • Share this:
  இருபத்தைந்து, முப்பது வருடங்களேனும் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து, சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவர்களுக்குதான் இப்படியெல்லாம் நடக்கும் தனுஷுக்கு அதற்கு முன்பே நடக்க ஆரம்பித்திருக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் அவரை வைத்து எடுக்கப்படும் படம் குறித்துப் பேச தயாசூப்பாளர்களுடன் தனுஷை நேசூல் வந்து சந்தித்துள்ளார்.

  அசுரன், கர்ணன் போன்ற படங்களும், ஹாலிவுட்டில் நடித்திருக்கும் தி க்ரே மேன் படமும் தனுஷை சர்வதேச நடிகராக மாற்றியுள்ளன. அடுத்து தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் - இந்தியன் திரைப்படமாக மிகப்பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.

  தற்போது தனுஷ் கார்த்திக் நரேன் படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. அதற்காக அங்கு தங்கியிருக்கும் தனுஷை சேகர் கம்முலாவும், தயாரிப்பாளர்கள் நாராயண்தாஸ் நரங், சுனில் நரங், பரத் நரங் மற்றும் பி.ராம் மோகன் ஆகியோர் சென்று சந்தித்தனர். இவர்கள் இணையும் படத்தில் பல மொழிகளைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள்

  நடிக்கயிருக்கிறார்கள். இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்ய உள்ளனர். இந்த சந்திப்பின் போது இது குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் அதிக பொருட்செலவில் (தி க்ரே மேன் தவிர்த்து) தயாராகும் படமாக இது இருக்கும். இந்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

  சேகர் கம்முலா படத்துடன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் தனுஷ் நடிக்கிறார். அத்துடன் ராட்சசன் ராம்குமார், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தலா ஒரு படம் நடிக்க உள்ளார். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அத்ரங்கி ரே திரைப்படம் இந்த வருடம் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Vijay R
  First published: