Home /News /entertainment /

Dhanush: மாளவிகா மோகனனுடன் ரொமான்ஸ்... காதலர் தினத்தில் ரசிகர்களை குஷியாக்கிய தனுஷ்!

Dhanush: மாளவிகா மோகனனுடன் ரொமான்ஸ்... காதலர் தினத்தில் ரசிகர்களை குஷியாக்கிய தனுஷ்!

தனுஷ் - மாளவிகா

தனுஷ் - மாளவிகா

மாறன் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் தனுஷுடன் ஐந்தாவது முறையாக ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்துள்ளார்.

    காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

    'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் இயக்குநரான கார்த்திக் நரேன் தற்போது மாறன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், மகேந்திரன், அமீர், பிரவீன், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன் போன்ற பலர் நடித்துள்ளனர். 'தொடரி', 'பட்டாஸ்' போன்ற படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷின் மாறன் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

    மாறன் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் தனுஷுடன் ஐந்தாவது முறையாக ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

    Arabic Kuthu: 10 மில்லியன் நிகழ்நேர பார்வைகளைப் பெற்ற விஜய்யின் அரபிக் குத்து!



     




    View this post on Instagram





     

    A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)






    Beast Arabic Kuthu: விஜய், பூஜா ஹெக்டேவின் தாறுமாறான ஆட்டத்தில் அரபிக் குத்து பாடல் வீடியோ!

    இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு, மாறன் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மாளவிகா மோகனனுடன் ரொமாண்டிக்காக தனுஷ் இருக்கும் அந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Dhanush

    அடுத்த செய்தி