Home /News /entertainment /

மாறன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரொமோ ரிலீஸ்... தனுஷ் குரலில் மிரட்டலான பாடல்

மாறன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரொமோ ரிலீஸ்... தனுஷ் குரலில் மிரட்டலான பாடல்

துருவங்கள் 16 படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

    தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் பாடலுடைய புரொமோ இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    துருவங்கள் 16 படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவருடன் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன், அமீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    ஜனவரி 26-ம்தேதியான நாளை மாறன் படத்திலிருந்து முதல் பாடலாக, பொல்லாத உலகம் என்ற பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று இந்தப் பாடலுடைய புரொமோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

    தனுஷ் பாடியிருக்கும் பொல்லாத உலகம் என்ற பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். நாளை மாலை 7 மணிக்கு மாறன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது. தியேட்டர் ரிலீசை தவிர்த்துள்ள மாறன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

    மாறன் படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என 2 மொழிகளில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தெலுங்கில் பிரபல இயக்குனராக இருக்கும் வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார்.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி