Home /News /entertainment /

தனுஷின் 'மாறன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷின் 'மாறன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் மாறன்

தனுஷ் மாறன்

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி என்ற திரைப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

    தனுஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியாகவுள்ள மாறன் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    துருவங்கள் 16 படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவருடன் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன், அமீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.



    இந்த நிலையில் ஜனவரி 26-ம்தேதி மாறன் படத்திலிருந்து முதல் பாடலாக, பொல்லாத உலகம் என்ற பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே (கலாட்டா கல்யாணம்), படங்களைத் தொடர்ந்து மாறன் படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதேபோன்று ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த கிரே மேன் படமும் பிரபல ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க : நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    கடைசியாக தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

    தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி என்ற திரைப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

    இதையும் படிங்க : டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 'மாறன்'... ஓடிடி ரிலீஸில் ஹாட்ரிக் அடிக்கும் தனுஷ் படங்கள்

    மாறன் திரைப்படம் பிப்ரவரி மாதம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி