ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘வாத்தி’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்… தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் ட்ரீட்

‘வாத்தி’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்… தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் ட்ரீட்

வாத்தி

வாத்தி

பாடலாசிரியராக தனுஷ் எழுதிய பல்வேறு பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. அந்த வரிசையில் இந்த படத்தின் பாடலும் இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வாத்தி படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்டாக இந்த பாடல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  திருச்சிற்றம்பலம் படத்தின் எதிர்பாராத வெற்றியை தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘நானே வருவேன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. பொன்னியின் செல்வன் படத்திற்கு டஃப் கொடுக்கும் என்று தனுஷ் ரசிகர்கள் கூறி வந்த நிலையில், இந்த படம் வந்த வேகத்திலேயே திரையரங்கை விட்டு வெளியேறியது.

  தற்போது நானே வருவேன் அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் ‘வாத்தி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் இந்த படம் ‘சார்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.

  ‘வாரிசு’ படத்தின் அடுத்த அப்டேட்… இசை உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்…

  இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது. இந்தப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தனுஷுக்கு ஜோடியாக வாத்தி படத்தில் சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார்.

  பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்கும் காயத்ரி…

  இந்நிலையில் வாத்தி படத்தின், ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை தனுஷ் எழுதியிருப்பதாகவும், காதல் பாடலாக வாத்தி படத்தின் முதல் பாடல் வெளிவரும் என்றும் ஜி.வி. பிரகாஷ் சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார்.

  பாடலாசிரியராக தனுஷ் எழுதிய பல்வேறு பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. அந்த வரிசையில் இந்த படத்தின் பாடலும் இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  தற்போது தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் முன்னதாக சாணி காயிதம் மற்றும் ராக்கி ஆகிய படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor dhanush