Home /News /entertainment /

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

தனுஷ்

தனுஷ்

கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷின் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுவதால் அவரது ரசிகர்கள் திருச்சிற்றம்பலம் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் - இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

    கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற இயக்குநர் ஷங்கர்!

    திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ லான்ச் நடந்து முடிந்துள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

    இந்நிலையில் ட்ரெய்லர் நாளை மறுதினம் இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகியுள்ளது.

    ட்ரெய்லர் அறிவிப்பு காட்சியில் படத்தின் நாயகி பிரியா பவானி ஷங்கர் இடம்பெற்றுள்ளார். ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு பிரியா வராதது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ட்ரெய்லர் அறிவிப்பு வீடியோவில் அவர் இடம்பெற்றிருக்கிறார்.

    விலங்குகளுக்காக மீண்டும் நிர்வாண புகைப்படங்களை எடுங்கள்… ரன்வீர் சிங்கிற்கு பீட்டா அழைப்பு

    கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷின் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுவதால் அவரது ரசிகர்கள் திருச்சிற்றம்பலம் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி