ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு…

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு…

தனுஷ்

தனுஷ்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘நானே வருவேன்’ படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்களைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. சினிமா ரசிகர்கள் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், இந்த படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

    துள்ளுவதோ, இளமை காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்று செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் நானே வருவேன் திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதேபோன்று யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பின்னணி இசையை தவிர்த்து பாடல்கள் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.

    தேடித் தேடி செல்லும் கூட்டம்.. தீபாவளி படங்களுடன் போட்டி போடும் பொன்னியின் செல்வன்.!

    ‘நானே வருவேன்’ திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ வெளியான அதே நாளில் வெளியிடப்பட்டது. ஒருவேளை ரிலீஸ் தேதியை மாற்றி இருந்தால் இன்னும் சற்று கூடுதல் வரவேற்பு நானே வருவேன் பெற்றிருக்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் நானே வருவேன் திரைப்படம் வரும் 27-ஆம தேதியன்று வியாழக்கிழமை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நானே வருவேன் திரைப்படத்தில் பிரபு, கதிர் என 2 கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்திருந்தார். தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

    ’வாவ்’ சொல்ல வைக்கும் ஜான்வி கபூர் போட்டோஸ்..

    இதனை தவிர்த்து தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் புதுப்பேட்டை படத்தின் 2-ஆம் பாகம் உருவாகும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush