Dhanush: வெற்றிமாறன் பெயருடன் தொடர்புடைய படத்தில் நடிக்கும் தனுஷ்!

தனுஷ்

இது வரை டி43 என்று குறிப்பிடப்பட்ட இந்த படத்திற்கு தற்போது 'மாறன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

  • Share this:
    தனுஷ் - கார்த்திக் நரேன் இணையும் படத்துக்கு ‘மாறன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கும் D43 படத்தில் நடித்து வருகிறார். இந்த அணி தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் உள்ளது. சமீபத்தில் மாளவிகா மோகனன் மற்றும் மாஸ்டர் மகேந்திரன் இருவரும் படப்பிடிப்பில் இணைந்தனர். இந்நிலையில் தனுஷ் இன்று தனது 38-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், D43 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டைட்டிலையும் வெளியிட்டுள்ளது.

    இது வரை டி43 என்று குறிப்பிடப்பட்ட இந்த படத்திற்கு தற்போது 'மாறன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ், ஒரு கையில் பேனாவைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையில் ஒரு நபரின் தலையை ஒரு கண்ணாடி மேசையில் வைத்து அழுத்தும்படியாக உள்ளது. அந்த நபர் கையில் துப்பாக்கியை வைத்திருப்பதையும் காண முடிகிறது. சிதறிய கண்ணாடி துண்டுகளின் நான்கு பிரதிபலிப்புகளில், அவர் நான்கு வெவ்வேறு பாவனைகளில் காணப்படுகிறார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். எமோஷனல் ஆக்‌ஷன் த்ரில்லர் என்று கூறப்படும் இந்த படத்தில், தனுஷ் மற்றும் மாளவிகா இருவரும் பத்திரிகையாளர்களாக நடிக்கிறார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் மகேந்திரன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது போல் தெரிகிறது. சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: