அடிச்சு தொரத்து கர்ணா... வாள்தூக்கி வந்தான் பாரு.. வெளியானது கர்ணன் டீசர்

கர்ணன் டீசர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

 • Share this:
  பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் கர்ணன். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மாரி செல்வராஜ், தனுஷ், சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணைவதாக அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

  அதனையடுத்து, தொடர்ந்து வெளியான படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர், கண்டா வரச் சொல்லுங்க, பண்டாரத்தி, தட்டான் தட்டான் உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கர்ணன் படத்தின் டீசர் வெளியானது. 2 நிமிடங்கள் கொண்ட இந்த டீசர் தனுஷின் அறிமுகம் கடைசியில் இருக்கிறது. கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் துயர் துடைக்க வருவதாக தனுஷின் அறிமுகம் அமைந்துள்ளது.

  வாள்தூக்கி நின்னான் பாரு என்று கண்டா வரச் சொல்லுங்க பாடலில் உள்ளது போல வாளுடனே தனுஷ் அறிமுகம் உள்ளது. படத்திலும், தனுஷைக் கடந்து குணச்சித்திர நடிகர் லால், வாள், குதிரை உள்ளிட்டவையும் படத்தில் கவனத்தை ஈர்க்கும் என்று தெரிகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: