• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Dhanush Karnan: கர்ணன் படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை வெளியீடு!

Dhanush Karnan: கர்ணன் படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை வெளியீடு!

கர்ணன் பட ஸ்டில்

கர்ணன் பட ஸ்டில்

’கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடல், கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

  • Share this:
    கர்ணன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

    ’பரியேறும் பெருமாள்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது ’கர்ணன்’ படத்தை இயக்கியுள்ளார். தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.



    மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து கர்ணன் திரைப்படம் தயாராகியிருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ’கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடல், கடந்த மாதம் வெளியானது. கிராமியப் பாடலான இதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு யூ-ட்யூபில் 1 கோடி பார்வைகளையும் கடந்துள்ளது.

    இந்நிலையில் கர்ணன் படத்தின் அடுத்தப் பாடல், மார்ச் 2-ம் தேதி, அதாவது நாளை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதோடு படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: