Karnan: தொலைக்காட்சியில் தனுஷின் கர்ணன் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

கர்ணன்

கர்ணன் திரைப்படம், முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின்னர் மே 14-ம் தேதி, அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது.

  • Share this:
    தனுஷ் நடிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கர்ணன்’ திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

    பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய படம் ‘கர்ணன்’. அதில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு இப்படத்தைத் தயாரித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.



    தென் மாவட்டங்களில் நிலவியிருந்த சாதிய வன்மத்தை மையப்படுத்திய கர்ணன் திரைப்படம், முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின்னர் மே 14-ம் தேதி, அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. இந்நிலையில் கர்ணன் எப்போது தொலைக்காட்சியில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் கர்ணன் திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கர்ணன் விரைவில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்ணன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: