Karnan: அமேசான் ப்ரைமில் வெளியாகும் தனுஷின் ’கர்ணன்’!

கர்ணன் பட போஸ்டர்

கர்ணன் அமோக வரவேற்பை பெற்றதுடன் சர்ச்சைக்கும் உள்ளானது.

  • Share this:
    மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 9-ம் தேதி கர்ணன் வெளியானது. பரியேறும் பெருமாள் என்ற அரசியல் படத்தை கலை அழகோடு தந்த மாரி செல்வராஜின் படம் என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவியது.

    அதற்கேற்ப படத்தின் பாடல்கள் ரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்டன. பட வெளியீட்டை அறிவித்த நிலையில், 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால், திட்டமிட்டபடி படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

    தயாரிப்பாளர் தாணு ஏப்ரல் 9-ம் தேதி படத்தை வெளியிடுவதில் உறுதியாக இருந்ததால், திட்டமிட்டபடி படம் வெளியாகி மகத்தான வெற்றியை பெற்றது. இதன் தெலுங்கு ரீமேக் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டது.
    கர்ணன் அமோக வரவேற்பை பெற்றதுடன் சர்ச்சைக்கும் உள்ளானது. கொடியங்குளம் கலவரத்தை மையப்படுத்தி இந்தப் படத்தை மாரி செல்வராஜ் எடுத்திருந்தார். அந்தக் கலவரம் நடந்தது ஜெயலலிதா ஆட்சியில். ஆனால், அது கலைஞர் ஆட்சியில் நடந்தது போல் வருடத்தை மாற்றி குறிப்பிட்டிருந்தனர். உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் சுட்டிக் காட்டிய பின் தவறை திருத்துவதாக கூறி, தொண்ணூறுகளின் பிற்பகுதி என மாற்றினர்.

    தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஆட்சி செய்தவர் கலைஞர். கொடியங்குளம் கலவரம் நடந்தது முற்பகுதியில். வருடத்தை மாற்றி கூறிவிட்ட வருத்தம் இப்போதும் திமுக அனுதாபிகளிடம் உள்ளது. திரையரங்கில் அமோக வெற்றி பெற்ற கர்ணன் மே 14-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. திரையரங்கில் கர்ணனை பார்க்க இயலாதவர்கள் அமேசான் பிரைமில் படத்தை கண்டு களிக்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: