அமேசான் ப்ரைமில் வெளியாகும் தனுஷின் கர்ணன்?

அமேசான் ப்ரைமில் வெளியாகும் தனுஷின் கர்ணன்?

கர்ணன் பட போஸ்டர்

தனுஷின் கர்ணன் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் 9-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து திரையரங்கில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது கர்ணன். 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி இருந்திருந்தால் இன்னும் அதிக வசூலைப் பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒருபக்கம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரைபிரபலங்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டினார்கள். திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த போதே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த 26-ம் தேதி முதல் திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி மே 9-ம் தேதி கர்ணன் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஜூன் மாதம் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: