தனுஷின் கர்ணனுக்கு தடை கோரி வழக்கு - மாரி செல்வராஜூக்கு நோட்டீஸ்

கர்ணன் பட ஸ்டில்

கர்ணன் படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, திரைப்பட தணிக்கைத் துறை மண்டல அலுவலர் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது

 • Share this:
  மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

  ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ‘பண்டாரத்தி புராணம்’ என்ற பாடலின் வரிகள் தமிழகத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாக மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த புல்லட் பிரபு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

  அந்த மனுவில், பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கும் வரை கர்ணன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தணிக்கைத்துறை வழங்கிய சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

  இதனை விசாரித்த நீதிபதிகள் திரைப்பட தணிக்கைத் துறை மண்டல அலுவலர், இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, திங்க் மியூசிக் இந்தியா யூடியூப் சேனலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

  செய்தியாளர் : கருணாகரன்

  மதுரை
  Published by:Sheik Hanifah
  First published: