செல்வராகவன் இயக்கிவரும் நானே வருவேன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் தனுஷும் கலந்து கொள்கிறார்.
அறிவிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேல் கிடப்பில் போடப்பட்ட திரைப்படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். எஸ் தாணு படத்தை தயாரிக்கிறார். தனுஷின் ஒவ்வொரு படம் முடியும் போதும் அடுத்து அவர் நானே வருவேன் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு மாறாக வேறு படங்களுக்கு தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்து வந்தார். ஒருவழியாக நானே வருவேன்
படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட போதும் வெங்கி அட்லூரியின் வாத்தி படத்தில் நடிக்கச் சென்றார் தனுஷ். வாத்தி முடிந்த நிலையில் தற்போது நானே வருவேன் படத்திற்கு திரும்பியிருக்கிறார்.
என்றும் என்றென்றும்... ரஜினியுடனான படத்தைப் பகிர்ந்த இசைஞானி இளையராஜா!
சென்னையில் இதன் முதல் ஷெட்யூல் நடந்தது. இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் இன்று ஆரம்பித்திருக்கிறது. நாளை இந்தப் படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் தனுஷுடன் இந்துஜா, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
இசை யுவன் ஷங்கர் ராஜா. செல்வராகவனின் திரைப்படங்களில் தொடர்ச்சியாக பங்காற்றி வந்த அவரது நண்பர் அர்விந்த் கிருஷ்ணா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு அவருக்கு பதில் சாணிக் காயிதம் படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி ஒளிப்பதிவு செய்தார். தற்போது அவரையும் மாற்றி ஓம் பிரகாஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
Arabic Kuthu: யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடம், 20 மில்லியன் நிகழ்நேர பார்வைகள்... கலக்கும் விஜய்யின் அரபிக் குத்து!
நானே வருவேனில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த இரு தோற்றங்களையும் சில தினங்கள் முன்பு செல்வராகவன் வெளியிட்டிருந்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.