ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

புதிய படத்திற்காக புஷ்பா இயக்குநருடன் கைக்கோர்க்கும் தனுஷ்?

புதிய படத்திற்காக புஷ்பா இயக்குநருடன் கைக்கோர்க்கும் தனுஷ்?

சுகுமார் - தனுஷ்

சுகுமார் - தனுஷ்

Dhanush: தனுஷ் அடுத்ததாக புஷ்பா பட இயக்குநர் சுகுமாரின் இயக்கத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தனிப்பட்ட பிரச்னைகளுக்கு இடையே நடிகர் தனுஷின் புதியப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வாத்தி படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகிறார் நடிகர் தனுஷ். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இது தவிர, மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகியப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு ஹாலிவு படமான ‘தி க்ரே மேன்’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். பாலிவுட்டில் நுழைந்த தனுஷ் அங்கும் தனக்கான மார்க்கெட்டை பிடித்திருக்கிறார். அக்‌ஷய குமார் மற்றும் சாரா அலிகானுடன் அவர் நடித்த அத்ராங்கி ரே கடந்த மாதம் வெளியானது.

வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ்? வலம் வரும் புகைப்படம்!

இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக புஷ்பா பட இயக்குநர் சுகுமாரின் இயக்கத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகுமார் ஏற்கனவே ராம் சரண், சமந்தா நடிப்பில் ரங்கஸ்தலம் படத்தை இயக்கியவர். அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து புஷ்பா படத்தை இயக்கினார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள அந்தப் படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில், இரண்டாவது பாகம் இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே ஒரு முத்தக்காட்சியின் மூலம் சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன்!

இதற்கிடையே சுகுமாரும், தனுஷும் புதிய படத்தில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருப்போம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush