நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. அதைத்தொடர்ந்து திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம்
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. அதேபோல் தனுஷூம் திரையரங்க வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் அந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் தற்போது ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
முழுக்க முழுக்க
தோட்டா தெறிக்க, ஒரு கேங்ஸ்டர் படமாக இது உருவாகியிருப்பதாக தெரிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த தனுஷ், லண்டனில் எப்படி
தாதாவாக மாறுகிறார் என்பதை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜகமே தந்திரம் ட்ரைலர் இறுதியில், ‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ என தனுஷ் சொல்கிறார்’. இந்த ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.