தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரன்னிங் டைம் அப்டேட்

ஜகமே தந்திரம்

தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. அதைத்தொடர்ந்து திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. அதேபோல் தனுஷூம் திரையரங்க வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இத்திரைப்படம் 157 நிமிடங்கள் கொண்டது என்று 18 வயதுக்கு மேலானவர்கள் பார்க்கக்கூடிய படம் என்றும் கூறப்படுகிறது.தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கர்ணன்’ திரைப்படத்தை அடுத்து பாலிவுட்டில் அக்‌ஷய்குமாருடன் அத்ரங்கி ரே படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், ஹாலிவிட்டில் ‘தி க்ரே மேன்’(The Gray Man) கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் ’நானே வருவேன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
Published by:Sheik Hanifah
First published: