முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Jagame Thandhiram: நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’!

Jagame Thandhiram: நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’!

ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம்

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. அதைத்தொடர்ந்து திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. அதேபோல் தனுஷூம் திரையரங்க வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இருப்பினும் கொரோனா சூழலை மனதில் கொண்டு, இன்று ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. 190 நாடுகளில் 17 மொழிகளில் இப்படம் வெளியாவதாக முன்பே கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

சிம்ரன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஜகமே தந்திரம் பட ரிலீஸை முன்னிட்டு நடிகர் தனுஷுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு.

அனிருத்தின் வாழ்த்து.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Dhanush