முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Jagame Thandhiram: நெட்ஃபிளிக்ஸில் ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு - தனுஷ் அதிருப்தி?

Jagame Thandhiram: நெட்ஃபிளிக்ஸில் ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு - தனுஷ் அதிருப்தி?

தனுஷ்

தனுஷ்

தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. அதைத்தொடர்ந்து திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. அதேபோல் தனுஷூம் திரையரங்க வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் இச்செய்தியை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் கூட செய்யவில்லை. எனவே அவர் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

‘கர்ணன்’ திரைப்படத்தை அடுத்து பாலிவுட்டில் அக்‌ஷய்குமாருடன் அத்ரங்கி ரே படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’(The Gray Man) படத்தில் நடித்து வருகிறார். அதற்காக தற்போது அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் D43 பணிகளை கவனிப்பார். பின்னர் செல்வராகவனின் ’நானே வருவேன்’, மீண்டும் மாரி செல்வராஜ் உடன் ஒரு படம் என அடுத்தடுத்த பணிகளில் இறங்குவார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Dhanush, Kollywood