Jagame Thandhiram: 190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியாகும் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’!

தனுஷ்

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம், 17 மொழிகளில், 190 நாடுகளில் வெளியாவதாக தற்போது கார்த்திக் சுப்பாராஜ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகிறது.

    கொரோனா பேரிடரால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகின்றன. சென்ற மாதம் 13-ஆம் தேதி சல்மான் கானின் ராதே - யுவர் மோஸ்ட் வான்டட் பாய் திரைப்படம் திரையரங்கு, ஓடிடி, டிடிஹெச் என மூன்று தளங்களில் வெளியானது. இந்தப் படம் ஓடிடி மூலம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானதாக கூறப்பட்டது.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம், 17 மொழிகளில், 190 நாடுகளில் வெளியாவதாக தற்போது கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இந்தப் படம் வரும் 18-ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் நிலையில், இந்தத் தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், போலிஷ், போர்ச்சுகீஸ், ப்ரேசிலியன், ஸ்பானிஷ் - ஸ்கேட்டிலியன், ஸ்பானிஷ் - நியூட்ரல், தாய், இந்தோனேஷியன் மற்றும் வியட்நாமிஸ் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இந்த மொழிகளில் படத்தை 'டப்' செய்துள்ளனரா இல்லை, சப் டைட்டில் மட்டும் இந்த மொழிகளில் வருமா என்பதை தெரிவிக்கவில்லை.

    ஜகமே தந்திரம் ஓடிடி தளத்தில் வெளியாவதால் மட்டுமே இத்தனை அதிக மொழிகளில், இத்தனை அதிக நாடுகளில் வெளியாகிறது. படத்தின் வெற்றியைப் பொறுத்து மேலும் பல பெரிய பட்ஜெட் படங்கள் நேரடி ஓடிடி வெளியீட்டுக்கு வரலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: