இளைய சூப்பர் ஸ்டாராகும் நடிகர் தனுஷ்!

news18
Updated: July 28, 2019, 5:36 PM IST
இளைய சூப்பர் ஸ்டாராகும் நடிகர் தனுஷ்!
நடிகர் தனுஷ்
news18
Updated: July 28, 2019, 5:36 PM IST
நடிகர் தனுஷுக்கு, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கியுள்ளார்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என திரைத்துறையில் பன்முக திறமைகளோடு வலம் வரும் தனுஷ் இன்று தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் அவரது தாய், தந்தை, மனைவி மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நடிகர் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் அளிப்பதாக கூறினார்.




இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய தனுஷ், “தயாரிப்பாளர் தாணு என் மீதான அன்பு மிகுதியால் எனக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தார். எனக்கு இந்த பட்டம் எல்லாம் வேண்டாம். தனுஷ் என்ற பெயர் மட்டுமே போதும். என் ரசிகர்களுக்கு அன்பான கோரிக்கை. மற்ற நடிகர்களைப் பற்றி நாம் பேச வேண்டாம். அப்படி உங்களிடம் யாராவது பகை காட்டினாலும் பொறுமை காக்கவும். பதிலுக்கு பகையைக் காட்டாதீர்கள். அன்பு மட்டுமே நிரந்தரம். விரைவில் அனைத்து ரசிகர்களையும் சந்திக்கிறேன்” என்றார்.

அவர் இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்றாலும், அவரது அடுத்த படத்தின் டைட்டில் கார்டில் அந்தப் பட்டத்துடன் தான் தனுஷின் பெயர் தோன்றும் என்று கூறப்படுகிறது.

Loading...

வீடியோ பார்க்க: தங்க மகன் தனுஷ் சக்ஸஸ் ஸ்டோரி..

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...