• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் - இயக்குனர் யார் தெரியுமா?

மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் - இயக்குனர் யார் தெரியுமா?

தனுஷ்

தனுஷ்

மேலும் ஒரு படத்தை சன் பிக்சர்ஸ் தனுஷ் நடிப்பில் தயாரிக்கிறது.

  • Share this:
    சன் பிக்சர்ஸ் ஒரு முடிவோடுதான் களமிறங்கியிருக்கிறது. ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட், தனுஷின் திருச்சிற்றம்பலம் என முன்னணி நடிகர்களின் படங்களை தொடர்ச்சியாக தயாரித்து வருகிறது.

    தனுஷை வைத்து அவர்கள் மேலும் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் ஒரு படத்தை தயாரிக்கும் போது அவர்கள் தயாரிப்பாளர்களாக மட்டும் லாபம் அடைவதில்லை. படத்தின் திரையரங்கு விநியோக உரிமை மூலம் ஒரு லாபம் வரும். சன் தொலைக்காட்சியில் அப்படம் ஒளிபரப்பாகும். படத்தை அவர்களே தயாரிப்பதால் சேட்டிலைட் உரிமை இலவசம். படத்தை டப் செய்து தங்களின் மலையாள, தெலுங்கு, கன்னட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவார்கள். அதுவும் இலவசம். அதன் பிறகு டிஜிட்டல் உரிமை. சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் படத்தை காசு செலவில்லாமல் வெளியிடலாம்.

    ஒரு படத்தை தயாரிப்பதில் இப்படி பல வியாபாரங்கள் அடங்கியுள்ளன. அதனால், தொடர்ச்சியாக முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் தயாரிக்கிறார்கள். அவர்களின் வியாபார வலையில் இதுவரை சிக்காதவர் அஜித் மட்டுமே. அவர் தனிரகம். போனி கபூர் போன்ற வெளி மாநில நபர்களே அவருக்கு சவுகரியம்.

    சரி நம் விஷயத்துக்கு வருவோம். தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மித்ரன் ஆர் ஜவஹர் படத்தை இயக்கி வருகிறார். ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று நாயகிகள். பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோரும் நடிக்கின்றனர். அனிருத் இசை.

    இந்தப் படத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு படத்தை சன் பிக்சர்ஸ் தனுஷ் நடிப்பில் தயாரிக்கிறது. இதனை அனேகமாக சுந்தர் சி. இயக்குவார் என கூறப்படுகிறது. சுந்தர் சி. தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் அரண்மனை 3 அக்டோபர் 14 வெளியாகிறது. அத்துடன் தலைநகரம் 2 படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து தனுஷ் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.

    தனுஷ் திருச்சிற்றம்பலம், மாறன் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சேகர் கம்முலாவின் படம். அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன். அதனைத் தொடர்ந்து சுந்தர் சி. படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: