மீண்டும் சத்யஜோதி தயாரிப்பில் தனுஷ் - இயக்குநர் யார் தெரியுமா?

தனுஷ்

சேகர் கம்முலா, செல்வராகவன், பாலாஜி மோகன், ரவிக்குமார் உள்பட பல இயக்குனர்களின் படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.

 • Share this:
  தனுஷை வைத்து படம் இயக்க அரை டஜன் இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். இதில் பலருக்கு தனுஷ் கால்ஷீட் கொடுத்துள்ளார். புதிய தகவல், அவர் மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸுக்காக ஒரு படம் நடிக்க உள்ளார்.

  2016-ல் பிரபுசாலமன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸுக்காக தொடரி படத்தில் நடித்தார் தனுஷ். படம் மிகவும் சுமாராகப் போக, மீண்டும் 2020-ல் கால்ஷீட் தந்தார். துரை.செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாசு படம் தயாரானது. அதுவும் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்தார். இதுவும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. மாறன் படத்துடன் ஹிப் ஹாப் ஆதி எழுதி இயக்கி நடிக்கும் சிவகுமாரின் சபதம், அன்பறிவு படங்களையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

  சேகர் கம்முலா, செல்வராகவன், பாலாஜி மோகன், ரவிக்குமார் உள்பட பல இயக்குனர்களின் படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக் கொண்டுள்ளார். இவர்களை முந்திக் கொண்டு சன் பிக்சர்ஸ் திருச்சிற்றம்பலம் என்ற படத்தை தனுஷை வைத்து சமீபத்தில் தொடங்கியது, மித்ரன் கே ஜவஹர் இயக்கம். இதையடுத்து தனுஷ் மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கலாம் என்கின்றன தகவல்கள். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்தப் படத்தை இயக்க அதிக சாத்தியம் உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இன்னும் சில தினங்களில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வரலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: