Home /News /entertainment /

தனுஷின் ஹாலிவுட் படத்தின் வெளியீட்டு விவரம்!

தனுஷின் ஹாலிவுட் படத்தின் வெளியீட்டு விவரம்!

தி க்ரே மேன்

தி க்ரே மேன்

தனுஷுடன் நடித்திருப்பது ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரேயான் கோஸ்லிங் மற்றும் க்ரிஷ் ஈவனஸ். இந்த தேதியில் இவர்கள் ஹாலிவுட்டின் அஜித்தும், விஜய்யும் போல இருக்கிறார்கள்.

தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படம் தி க்ரே மேனின் ரிலீஸ் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

துள்ளுவதோ இளமையில் அறிமுகமான தனுஷ் இப்போது உலகம் அறிந்த நடிகர். ஏற்கனவே ஒரு இன்டர்நேஷனல் படத்தில் நடித்துள்ளார். அவரது முதல் ஹாலிவுட் திரைப்படம் தி க்ரே மேன் விரைவில் வெளியாக உள்ளது. தனுஷின் மாமனார் ரஜினி பிளட் ஸ்டோன் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்தார். அதுபோன்ற அறிமுகமில்லாத இயக்குனரின் படமல்ல தி க்ரே மேன். அவென்ஜர்ஸ் படத்தை இயக்கிய ஹாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களான ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ படத்தை இயக்கியுள்ளனர்.

தனுஷுடன் நடித்திருப்பது ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரேயான் கோஸ்லிங் மற்றும் க்ரிஷ் ஈவனஸ். இந்த தேதியில் இவர்கள் ஹாலிவுட்டின் அஜித்தும், விஜய்யும் போல இருக்கிறார்கள். அவர்களுடன் தான் தனுஷ் நடித்துள்ளார். இர்பான் கான், அனில் கபூர் போன்றவர்கள் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார்கள். குணச்சித்திர வேடங்களில் இவர்கள் வந்து போவார்கள். தனுஷ் நடித்திருப்பது அப்படியான வேடமில்லை. அவர் தி க்ரே மேனில் மூன்று ஹீரோக்களில் ஒருவர். இந்திய நடிகர் ஒருவர் இப்படியான மரியாதையை பெறுவது இதுவே முதல்முறை.

தி க்ரே மேன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக தயாரிக்கப்பட்டது. நெட்பிளிக்ஸில் இதுவரை வெளியான ஒரிஜினல் திரைப்படங்களில் சமீபத்தில் வெளியான ரெட் நோட்டீஸ் திரைப்படமே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். அந்தப் படத்தைவிட அதிக பட்ஜெட்டில் தி க்ரே மேன் தயாராகியுள்ளது.

இந்தப் படம் 2022 ஜுன் மாதம் வெளியாகிறது. விரைவில் நெட்பிளிக்ஸ் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளது. இது தனுஷின் தொடர்ச்சியான நான்காவது நேரடி ஓடிடி வெளியீடாக இருக்கும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor dhanush, Tamil Cinema

அடுத்த செய்தி