தனுஷ் இயக்கும் சரித்திர படத்தின் டைட்டில் பற்றிய அப்டேட்

தனுஷ் இயக்கத்தில் தொடங்கப்பட்ட சரித்திர படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் இயக்கும் சரித்திர படத்தின் டைட்டில் பற்றிய அப்டேட்
நடிகர் தனுஷ்
  • Share this:
நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராகவே அவதாரமெடுத்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பட இயக்கத்தையும் தனுஷ் தொடங்கினார்.

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க நாகர்ஜூன், ஸ்ரீகாந்த், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட சிலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்தப் படத்தில் தனுஷூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இத்திரைப்படத்துக்கு நான் ருத்ரன் என்று டைட்டில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

ஆனால் ஆரம்பித்த வேகத்தில் பைனான்ஸ் பிரச்னையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் இத்திரைப்படத்தைத் தொடங்க தனுஷ் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


தயாரிப்பாளர் மாற்றம் இருக்குமா அல்லது அதே தயாரிப்பாளரே படத்தைத் தயாரிக்கிறாரா என்பதெல்லாம் விரைவில் தெரியவரும். இதனிடையே தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், பாலிவுட்டில் Atrangi Re உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார்.

மேலும் படிக்க: முதல் பட ஷூட்டிங் முடியும் முன்பே உயிரிழந்த தமிழ் சினிமா இயக்குநர் - பிரபல நடிகை இரங்கல்
First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading