Dhanush: அடுத்த 3 ஆண்டுகளுக்கு இயக்குநர் வேலையை தள்ளி வைத்த தனுஷ்!

தனுஷ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் வரும் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

  • Share this:
    இயக்குனர் கனவை மூன்று வருடங்களுக்கு தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

    நடிகராக அறிமுகமாகி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் வளர்ந்து 'ப... பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆனார் தனுஷ். இனிமேல் அவ்வப்போது படங்கள் இயக்குவேன் என்று அறிவித்தவர், இரு வருடங்களுக்கு முன் நாகார்ஜுன், எஸ்.ஜே.சூர்யா, அதிதி ராவ் ஹிதாரி நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கினார். பிறகு அப்படம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், மீண்டும் படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு, மூன்று வருடங்களுக்கு அது பற்றி யோசிக்கப் போவதில்லை என்று பதிலளித்துள்ளார். கதைப்பஞ்சம் காரணமா? என்றால் அது இல்லையாம். தனது மனதுக்கு நெருக்கமான பல கதைகள் தன்னிடம் இருப்பதாகவும், அதேநேரம், கடவுளின் அருளால் கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் போன்ற திறமைசாலிகளின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், மேலும் பல புதிய இளம் இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தனுஷ் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் வரும் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இது தவிர செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படமும், கார்த்திக் நரேன், ராட்சசன் ராம் குமார், மாரி செல்வராஜ் ஆகியோர் இயக்கங்களில் தலா ஒரு படமும் நடிக்க இருக்கிறார். இந்தி ஹாலிவுட் படங்களும் தனஷ் நடிப்பில் வரவிருக்கின்றன. நடிகராக நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து அமைவதால் இயக்குனர் தனுஷை மூன்று வருடங்களுக்கு வெளியே விடுவதில்லை என முடிவெடுத்துள்ளார். சிறப்பான தரமான முடிவு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: