ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரிக்ஸ் பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற தனுஷ்!

பிரிக்ஸ் பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற தனுஷ்!

தனுஷ்

தனுஷ்

கோவா திரைப்பட விழாவில் நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கோவாவில் நடைபெற்று வந்த 52-வது சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற BRICS திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்தில் நடித்த தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்படும் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும் இவ்விழாவில் சிறந்த நடிகராக தனுஷ் தேர்வாகி இருப்பது அவர் ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Dhanush gets best actor award for asuran at BRICS film festival, dhanush, dhanush asuran, dhanush award, dhanush asuran award, dhanush wife, dhanush son age, dhanush father, dhanush age, dhanush family, dhanush mother, dhanush sisters, தனுஷ், தனுஷ் மனைவி, தனுஷ் மகன் வயது, தனுஷ் தந்தை, தனுஷ் வயது, தனுஷ் குடும்பம், தனுஷ் தாய், தனுஷ் சகோதரிகள்,

  2009-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் BRICS திரைப்பட விழா இந்த முறை முதல் முறையாக கோவா சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி முதல் கோவாவில் நடைபெற்று வந்த சர்வதேச திரைப்பட விழா இந்நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்துள்ளது. தவிர அசுரன் படத்தில் சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தனுஷ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Dhanush, Tamil Cinema