தனுஷ் படங்களுக்கு ஏன் இப்படி ஒரு நிலை?

வட சென்னை படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது கைவிடப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

news18
Updated: July 16, 2019, 1:14 PM IST
தனுஷ் படங்களுக்கு ஏன் இப்படி ஒரு நிலை?
தனுஷ்
news18
Updated: July 16, 2019, 1:14 PM IST
கோலிவுட், பாலிவுட் வழியாக இன்று ஹாலிவுட் வரை தனுஷ் சென்றிருக்கும் நிலையில் இவருடைய தமிழ் படங்கள் அடுத்தடுத்து சிக்கலில் சிக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒல்லியான தேகம் பார்க்க பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றத்துடன் அறிமுகமான தனுஷ், பின் தனது விடா முயற்சியால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருமாறினார்.

தனுஷ் கௌதம் மேனன் கூட்டணியில் 2016-ம் ஆண்டு துவங்கப்பட்ட படம் எனை நோக்கி பாயும் தோட்டா. பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள நிலையில், நிதி நெருக்கடியால் சிக்கித்தவித்த இப்படம் தற்போதுவரை வெளியாகவில்லை. இதனால் இப்படம் நெட்டிசன்களால் கேலிக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
பவர் பாண்டியின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ஒரு படம் கடந்த ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் தொடங்கியது. நாகர்ஜுனா, ஹைதிதி ராவ் ஐதரி, எஸ்.ஜே.சூர்யா என மிரட்டலான கூட்டணியில் சரித்திரக் கால கதையில் மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகும் எனவும் அறிவிக்கப்பட்டது. நிதி சிக்கலால் இப்படத்தை பாதியிலேயே கைவிட்டது தேனாண்டாள் நிறுவனம்.

அதேபோல் இந்த ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட வட சென்னை படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது கைவிடப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான வட சென்னை படம் விமர்சகர்களிடம் பாராட்டுகளை பெற்ற அளவு வசூல் ஈட்டவில்லை என்பதால் இப்படத்தை தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் வட சென்னை படத்தில் வரும் ராஜன் கதாபாத்திரத்தின் வாழ்வியலை மட்டும் வலைத்தொடராக தயாரிக்க வெற்றிமாறன் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Loading...இது ஒருபக்கம் இருக்க அம்மா கணக்கு, காலா, விஐபி 2, மாரி 2 என தொடர் தோல்விகளால் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.ஒருபக்கம் பாலிவுட், ஹாலிவுட் என தனுஷின் திரை பயணம் உச்சம் நோக்கி நகர்ந்தாலும் இன்னொரு பக்கம் அவர் நடித்த தமிழ் படங்கள் அடுத்தடுத்து சிக்கலில் சிக்கி வருவது அவருடைய ரசிகர்களுக்கு அதிருப்தியையும் திரை வட்டாரத்திற்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Also watch

First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...