நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எல்லி அவர்ரம் என்ற வெளிநாட்டு நடிகை நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெயிலுக்கு ஏற்ற உடை எது... கலெக்சனை காட்டும் விஜய் டிவி டிடி!!
இதையடுத்து தனுஷ் தான் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இதில் அறிவிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேல் கிடப்பில் போடப்பட்ட திரைப்படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். எஸ் தாணு படத்தை தயாரிக்கிறார். தனுஷின் ஒவ்வொரு படம் முடியும் போதும் அடுத்து அவர் நானே வருவேன் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு மாறாக வேறு படங்களுக்கு தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்து வந்தார். தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
எதிர் நீச்சல் சீரியல் இயக்குநர் திருச்செல்வத்தை கண்டித்து புகைப்பட கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்
இதையடுத்து நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எல்லி அவர்ரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.