ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நானே வருவேன் படத்தில் தனுஷின் இரட்டை தோற்றம்!

நானே வருவேன் படத்தில் தனுஷின் இரட்டை தோற்றம்!

நானே வருவேன் தனுஷ்

நானே வருவேன் தனுஷ்

செல்வராகவன் இயக்கியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நானே வருவேன் படத்தில் தனுஷின் இரண்டு தோற்றமும் வெளியிடப்பட்டுள்ளது.

  நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கியது. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ரசிகர்களுக்கு உற்சாகத்தை அதிகரிக்க, தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டனர். அதில் ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் க்ளீன் ஷேவில் இளமையாகவும், மற்றொரு தோற்றத்தில் தாடி மற்றும் கண்ணாடியுடனும் காணப்படுகிறார்.

  அப்பாவை தவிர எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தளபதி விஜய் தான் - துருவ் விக்ரம்!

  செல்வராகவன் இயக்கியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகிறது. இப்படத்தில் தனுஷ் தவிர இந்துஜா ரவிச்சந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வி கிரியேஷன்ஸ் பேனரில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை பணிகள் முடிந்துவிட்டதாக செல்வராகவன் சில நாட்களுக்கு முன் சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.

  இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பிக் பாஸ் 5 பெண் பிரபலம் மீது புகார்

  தனுஷ்-செல்வராகவன் ரசிகர்களுக்கு 'நானே வருவேன்' ஒரு சிறப்புப் படமாக இருக்கும். ஏனெனில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலான பிறகு, சகோதரர்கள் இணைந்து இப்படத்தில் பணிபுரிகிறார்கள். இதற்கு முன்பு ‘காதல் கொண்டேன்’, ‘துள்ளுவதோ இல்லமை’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினர். தவிர நானே வருவேன் படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor dhanush, Dhanush, Director selvaragavan