ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பான் இந்தியா அரசியல் த்ரில்லர் படத்தில் நடிக்கும் தனுஷ்… பூஜை இன்று நடைபெற்றது…

பான் இந்தியா அரசியல் த்ரில்லர் படத்தில் நடிக்கும் தனுஷ்… பூஜை இன்று நடைபெற்றது…

புதிய படத்தின் பூஜையின் போது தனுஷ் மற்றும் படக்குழுவினர்

புதிய படத்தின் பூஜையின் போது தனுஷ் மற்றும் படக்குழுவினர்

கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் இன்னும் மூன்று மாதங்களுக்குள் முடிவடைந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் தனுஷ், அடுத்த கட்டமாக பான் இந்தியா படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது.

திருச்சிற்றம்பலம் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே வெளியான சாணி காயிதம் மற்றும் ராக்கி ஆகிய படங்களை இயக்கி வரவேற்பை பெற்றிருந்தார்.

கேப்டன் மில்லர்  படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு முன்பாக தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. வாத்தி படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

''நான் சொன்னாதான் உண்டு..’’ காதல் குறித்து பேசிய நடிகை ரஷ்மிகா மந்தனா!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வாத்தி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் சார் என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் பான் இந்தியா படத்தில் நடிக்க உள்ளார். அரசியல் திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாக்கப்பட உள்ளது.

இதனை தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் சேகர் கம்முலா இயக்குகிறார். இந்தப் படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இதில் கேப்டன் மில்லர் கெட்டப் உடன் தனுஷ் பங்கேற்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தனுஷ் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் இன்னும் மூன்று மாதங்களுக்குள் முடிவடைந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாடர்ன் ட்ரெஸில் மிருணாள் தாகூரின் கலக்கல் போட்டோஷூட்..

இந்த இடைப்பட்ட காலத்தில் சேகர் கம்முலா இயக்கும் படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடைபெறும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கிடையே எச்.வினோத் இயக்கும் படம் ஒன்றில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் நேற்று பரவியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor dhanush