ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனுஷ் இயக்கப் போகும் 2ஆவது படம்… பக்கா ப்ளானில் படக்குழு… ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்

தனுஷ் இயக்கப் போகும் 2ஆவது படம்… பக்கா ப்ளானில் படக்குழு… ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்

தனுஷின கேப்டன் மில்லர் பட கெட்அப்

தனுஷின கேப்டன் மில்லர் பட கெட்அப்

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தனுஷ் இயக்கவுள்ள 2ஆவது படம் குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

    நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பல்வேறு திறமைகளைக் கொண்ட தனுஷ், பவர் பாண்டி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனார். ஃபீல் குட் மூவியாக ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றது.

    இயக்குனராக தனுஷுக்கு இந்தப் படம் பாராட்டுக்களை பெற்றுத் தந்தது. இந்த படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றிருப்பார். இந்நிலையில் தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள்  வெளிவந்துள்ளன.

    Fighter : ஃபைட்டராகும் இந்தி சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன்… புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் முன்னதாக ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கியுள்ளார். பீரியட் ஃபிலிமாக கேப்டன் மில்லர் படம் உருவாகி வருகிறது.

    இந்நிலையில் தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன. கேப்டன் மில்லர் படத்தின் ப்ரேக்கின்போது, தனுஷ் இயக்கும் படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் தொடங்குகிறது. கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றதும், தனுஷ் இயக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

    வரவேற்பை பெறும் சமந்தாவின் ‘யசோதா’ பட ட்ரெய்லர்… ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்!!

    இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து இளன் இயக்கும் படத்தில் தனுஷ் இணைகிறார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், அடுத்து வெளியாகவுள்ள வாத்தி திரைப்படத்தின் மீது தனுஷும் அவரது ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush