Dhanush: அமெரிக்காவில் தனுஷ்... இறுதிக்கட்டத்தை எட்டிய D43 - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தனுஷ்

கார்த்திக் நரேன் படம் எப்போது இறுதிக்கட்டத்தை எட்டியது என ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

  • Share this:
    தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படம் குறித்த அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் கார்த்திக் நரேன். மணிரத்னம், கௌதம் வாசுதேவ மேனன் போன்ற பலர் துருவங்கள் பதினாறு படத்துக்காக கார்த்திக் நரேனை புகழ்ந்தனர். கௌதம் ஒருபடி மேலேச் சென்று கார்த்திக் நரேனின் இரண்டாவது படமான நரகாசூரனை தயாரித்தார். கௌதமின் கடன்கள் காரணமாக நரகாசூரன் வெளிவர முடியாத சூழல் நிலவி, கார்த்திக் நரேனும், கௌதமும் கருத்து வேற்றுமையால் வார்த்தைகள்விட்டு, இறுதியில் கௌதம் அப்படத்தின் தயாரிப்பு பொறுப்பிலிருந்து விலகினார். பல வருட காத்திருப்புக்குப் பின் விரைவில் நரகாசூரன் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

    நரகாசூரனுக்குப் பிறகு அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியா வெளிவந்து பரவலான வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் தனுஷை வைத்து சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கு ஒரு படம் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் குறித்த அப்டேட்டை நேற்று மாலை சத்யஜோதி ஃபிலிம்ஸ் வெளியிட்டது. அதில், டி43 இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜுலையில் தொடங்குகிறது என்று கூறியுள்ளனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கர்ணன் படத்தை முடித்த தனுஷ், யுஎஸ் சென்று தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்தார். அவர் இன்னும் சென்னை திரும்பவில்லை. அப்படியிருக்க, கார்த்திக் நரேன் படம் எப்போது இறுதிக்கட்டத்தை எட்டியது என ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

    இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, விவேக் பாடல்கள் எழுதுகிறார். விரைவில் படத்தின் பெயரை அறிவிக்க உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: