முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தேசிய விருது பெறும் சூர்யா சாருக்கும் எனது நண்பர் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்துகள் - நடிகர் தனுஷ்!

தேசிய விருது பெறும் சூர்யா சாருக்கும் எனது நண்பர் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்துகள் - நடிகர் தனுஷ்!

தனுஷ் - சூர்யா - ஜி.வி.பிரகாஷ்

தனுஷ் - சூர்யா - ஜி.வி.பிரகாஷ்

தேசிய விருது பெற்றவர்களுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

தேசிய விருது வென்ற நடிகர் சூர்யாவுக்கும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கும் நடிகர் தனுஷ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

இந்திய சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.

சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது - மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு!

அதில் 9 பிரிவுகளில் மொத்தம் 10 விருதுகளை தமிழ் சினிமா வென்றுள்ளது. குறிப்பாக சூரரைப் போற்று திரைப்படம் சிறந்தப்படம், சூர்யாவுக்கு சிறந்த நடிகர், அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை பிரிவில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சிறந்த திரைக்கதை என மொத்தம் 5 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

இதையடுத்து விருது பெற்றவர்களுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் தேசிய விருது பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”தேசிய விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக சூர்யா சார் மற்றும் எனது நண்பர் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்துகள். தமிழ் சினிமாவுக்கு மிகவும் சிறந்த நாள். மிக்க பெருமை” என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Actor Suriya, Dhanush, GV prakash, National Film Awards