Home /News /entertainment /

உங்கள் யூகங்கள் உண்மை தான்... அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்!

உங்கள் யூகங்கள் உண்மை தான்... அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்!

தனுஷ்

தனுஷ்

‘சாணி காயிதம்’, ‘ராக்கி’ ஆகியப் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகின.

    நடிகர் தனுஷ் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    நடிகர் தனுஷ் இந்தியில் நடித்துள்ள அந்த்ரங்கி ரே திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதில் தனுஷுடன் இணைந்து அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதையடுத்து, மித்ரன் ஜவகரின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ உள்ளிட்டப் படடங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அதோடு ஆங்கிலப் படமான ‘தி க்ரே மேனின்’ படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்.

    அவர் நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழில் நடிக்கும் படத்தின் டைட்டில் நேற்று வெளியானது. இதற்கு தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் Sir என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து ‘சாணி காயிதம்’, ‘ராக்கி’ ஆகியப் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

    இதையும் படிங்க - நடிகர் வடிவேலுவிற்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவமனையில் அனுமதி

    அதில், ”ஆமாம். உங்கள் யூகங்கள் உண்மைதான். அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் நடிக்கும் அதிர்ஷ்டசாலி நான் தான். மற்ற தகவல்கள் விரைவில்” எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி