ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்!

தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்!

கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர்

இதற்கிடையில், தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் 'கேப்டன் மில்லர்' படத்திற்காக கைகோர்த்துள்ளார். குற்றாலத்தில் இதன் படப்பிடிப்பை தனுஷ் மீண்டும் தொடங்கியுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படம் 1930-40 களில் நடக்கும் கதை எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக தென்காசி மாவட்டத்தின் வனப்பகுதியில் ஒரு செட் அமைத்துள்ளனர். தனுஷ் மற்றும் 'கேப்டன் மில்லர்' படத்தின் மற்ற நட்சத்திரங்கள் முன்னதாக டிசம்பரில் ஒரு ஷெட்யூலை முடித்தனர். பின்னர் தங்கள் குடும்பத்துடன் பண்டிகை நாட்களை கொண்டாடும் விதத்தில் ஓய்வு எடுத்தனர்.

பொங்கல் விடுமுறையை முடித்து விட்டு, 'கேப்டன் மில்லரின் படப்பிடிப்பை தனுஷ் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளார். இந்த பீரியடிக் த்ரில்லர் படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஷிவ ராஜ்குமார் மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்கள் வரும் நாட்களில் படப்பிடிப்பில் இணைய உள்ளனர். முன்னதாக கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

'மதத்தைப் பார்த்து விமான நிலையத்தில் சோதனை’.. பகீர் குற்றச்சாட்டை கிளப்பிய சனம்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்!

இதற்கிடையில், தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனுஷ் இயக்கும் இரண்டாவது படமாக இருக்கும். விஷ்ணு விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடங்களில் நடிக்க, தனுஷ் நீட்டிக்கப்பட்ட கேமியோவில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. தவிர, தனுஷ் அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ்-தெலுங்கு என இருமொழியில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Dhanush