நடிகர் தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்திருக்கும் படங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

நடிகர் தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
நடிகர் தனுஷ்
  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷூக்கு நாளை பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் டைட்டில் லுக் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக காலடித் தடம் மட்டும் இருப்பது போன்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கரணன் படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பதிவில், “மாரி செல்வராஜ் உடன் இந்தப் படத்தில் ஒரு பங்காக நான் இருப்பது பெருமையடைகிறேன். இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான ரிலீஸ்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடலான ‘ரகிட ரகிட’ என்ற பாடல் நாளை வெளியிடப்பட உள்ளது. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களுக்கான உரிமையை சோனி நிறுவனம் வாங்கியிருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.நாளை தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு கர்ணன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் அறிவிப்புகளால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரே நாளில் ஜகமே தந்திரம் பாடல், கர்ணன் டைட்டில் லுக், மேக்கிங் வீடியோ ஆகியவை வெளியாக இருப்பதால் தனுஷ் ரசிகர்களுக்கு அவரது பிறந்தநாள் விருந்தாக அமைந்திருக்கிறது.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading