Home /News /entertainment /

Dhanush Birthday: தனுஷின் பர்த்டே பிளான் இதுதான்!

Dhanush Birthday: தனுஷின் பர்த்டே பிளான் இதுதான்!

தனுஷ்

தனுஷ்

தனுஷின் அடுத்த படமான ‘வாத்தி’ எனப்படும் ‘சார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

    நடிகர் தனுஷுக்கு இந்த பிறந்தநாள் வேலை நாளாக மாறியிருக்கிறது.

    ருஸ்ஸோ பிரதர்ஸின் சமீபத்திய வெளியீடு மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படமான 'தி கிரே மேன்' மீது தான் அனைவரின் பார்வையும் உள்ளது. கிறிஸ் எவன்ஸ், ரியான் கோஸ்லிங் மற்றும் அனா டி அர்மாஸ் நடித்த இந்த திரைப்படத்தில் தனுஷ் இடம்பெற்று ஹாலிவுட்டில் அறிமுகமானார். படத்தை ப்ரோமோட் செய்வதில் பிஸியாக இருக்கும் தனுஷுக்கு இன்று 39-வது பிறந்தநாள்.

    தனுஷுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவிக்கையில், "தனுஷ் தற்போது தனது அடுத்த இரண்டு படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருப்பதால் அவருக்கு பிறந்தநாள் பிளான்கள் எதுவும் இல்லை. ஒன்று ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாகும் 'திருச்சிற்றம்பலம்' மற்றொன்று 'நானே வருவேன்'. அதனால், வேலைகளை முடிப்பதில் அவர் மும்முரமாக இருப்பார்" என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வெற்றிகளை குவித்த வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி!

    தனுஷின் அடுத்த படமான ‘வாத்தி’ எனப்படும் ‘சார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று டீசரை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், தனுஷிடம் சில சுவாரஸ்யமான படங்கள் வரிசையாக உள்ளன. அதில் ஒன்று அருண் மாதேஸ்வரனின் 'கேப்டன் மில்லர்'.

    இதற்கிடையில், சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 'தி கிரே மேன்' படத்தின் பிரமாண்ட உலக பிரீமியரில் கவனத்தை ஈர்த்தார் தனுஷ். படத்தின் மும்பை பிரீமியரில், அவர் பாரம்பரியமான 'வேஷ்டி' அணிந்து ரெட் கார்பெட்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Dhanush

    அடுத்த செய்தி