கலிஃபோர்னியாவில் தனுஷின் ‘தி க்ரே மேன்’ பட ஷூட்டிங் - போட்டோஸ்

தனுஷ்

தனுஷ் நடிக்கும் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு கலிஃபோர்னியாவில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரமாண்ட தயாரிப்பாக ‘தி க்ரே மேன்’ என்கிற திரைப்படம் உருவாகிறது. ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தி க்ரே மேன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்க வேண்டிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள அமெரிக்கா பறந்தார் தனுஷ். தற்போது கலிஃபோர்னியாவில் மும்முரமாக ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளன. வரும் ஜூன் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்து நடிகர் தனுஷ் சென்னை திரும்புவார் என தெரிகிறது.அக்‌ஷய்குமார் உடன் தனுஷ் நடித்த ‘அத்ரங்கி ரே’ பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் ஆகஸ்ட் 6-ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜகமே தந்திரம் திரைப்படமும் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

தமிழில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து முடித்த பின்னர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்திலும் தனுஷ் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: