ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Dhanush: திரையரங்கில் வெளியாகும் தனுஷ் படம் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Dhanush: திரையரங்கில் வெளியாகும் தனுஷ் படம் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

தனுஷ் இந்தியில் நடித்துள்ள அத்ரங்கி ரே படத்தை ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் வருகிற 18-ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதையடுத்து, அவர் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்திப் படம் ஆகஸ்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்கில் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகின்றனர். அது பேரிடர் காலமாக இருந்தாலும் சரி, திரையரங்குக்கு ரசிகர்கள் வர தயங்குவதில்லை. இந்த வருடம் திரையரங்கில் வெளியான மாஸ்டர், சுல்தான், கர்ணன் படங்களே இதற்கு சான்று. மூன்று படங்களும் திரையரங்கில் வெளியாகி பெரும் லாபம் சம்பாதித்தன.

ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவதால் தனுஷ் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தனுஷ் இந்தியில் நடித்துள்ள அத்ரங்கி ரே படத்தை ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எட்டு வருடங்களுக்கு முன் ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல்.ராய். அவர் அத்ரங்கி ரே படத்தை இயக்க, சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான் நாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். அக்ஷய் குமாரின் மற்றொரு படமான பெல்பாட்டம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்க வெளியீடாக வரவுள்ளது அத்ரங்கி ரே.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: AR Rahman, Dhanush