Home /News /entertainment /

ஓடிடியில் புதிய சாதனை படைத்த தனுஷ் படம்!

ஓடிடியில் புதிய சாதனை படைத்த தனுஷ் படம்!

தனுஷ் படம்

தனுஷ் படம்

தனுஷின் இரண்டாவது நேரடி ஓடிடி வெளியீடாக அத்ரங்கி ரே இந்திப் படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியானது

தனுஷ் நடித்திருக்கும் அத்ரங்கி ரே திரைப்படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடியில் புதிய சாதனை படைத்துள்ளது.

இந்த வருடம் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் திரையரங்கில் வெளியானது. அனைத்து சென்டர்களிலும் படம் நல்ல கலெக்ஷனை பெற்றது. படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்க, திரையரங்குகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து கர்ணன் ஓடிடியில் வெளியானது. தமிழ் தவிர்த்த பிற மொழி பார்வையாளர்களையும் கர்ணன் ஓடிடி மூலம் சென்றடைந்தது.

அடுத்து ஜகமே தந்திரம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. படம் சுமார் என்றாலும் முதல்வாரம் அதிகமானோர் படத்தைப் பார்த்தனர். தனுஷின் இரண்டாவது நேரடி ஓடிடி வெளியீடாக அத்ரங்கி ரே இந்திப் படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியானது.

இதையும் படிங்க.. ராக்கி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்!

டிசம்பர் 24 வெளியான இந்தப் படம் முதல்நாளில் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியான எந்தப் படத்தையும்விட அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க.. இந்திய படங்களுக்கு சவால்.. 175 கோடிகளை வசூலித்த ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்!

அதாவது , டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியான புதுப்படங்களில் முதல் நாள் பார்வையில் அத்ரங்கி ரே முதலிடத்தில் உள்ளது. இந்தத் தகவலை அந்நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.ஆனந்த் எல்.ராய் இயக்கியிருக்கும் அத்ரங்கி ரேயில் தனுஷ், சாரா அலிகான், அக்ஷய் குமார் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகி உள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Actor dhanush, Kollywood

அடுத்த செய்தி